6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை டேப்லெட் வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியவர் ஜெயலலிதா. அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளி மாணவர்களுக்கு இதுவரை 52 லட்சத்து 17 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கி உள்ளார். தமிழகத்தில் தான் இவ்வளவு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த கல்வியைப்பெறுவதற்கு மடிக்கணினி, மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

52 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. 1,029 பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் நிறைந்த ஐடெக் லேப் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்படும்.

அதுபோல் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சம் மாணவர்களுக்கு கையடக்க கணினி (டேப்லெட்) விரைவில் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.