வரதட்சணை கொடுமையில் சிக்கி தவிக்கும் பெண் ஐபிஎஸ் அதிகாரி..!

கர்நாடகாவைச் சேர்ந்த 34 வயது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வரும் தனது கணவர் மீது வரதட்சணை, துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் புவசலில் நடைபெற்ற திருமணத்திற்கான முழு செலவையும் எனது பெற்றோர் தான் செய்தனர். இருப்பினும் திருமணமான 3 மாதங்களுக்குள் 3 லட்ச ரூபாய் பணமும், தங்க நகைகளும் தர வேண்டும், இல்லையென்றால் திருமணத்தை முறித்துக்கொள்வதாக கணவரும், அவரின் குடும்பத்தினரும் என்னை மிரட்டினர்.

பின்னர் இதையே கூறி அடிக்கடி என்னை மிரட்டி எனது பெற்றோர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டனர்.

மேலும் 2016ல் இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு சுற்றுலா சென்ற போது எனது கையை முறித்து மார்பிள் கல்லால் எனது கணவர் என்னை தாக்கினார். 2018ல் மீண்டும் ஒரு முறை கொழும்பு சென்ற போதும் அங்கு என்னை துன்புறுத்தினார் எனவும் தெரிவித்துள்ளார்.