மாவோயிஸ்ட் பிடியில் விவசாயிகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மாவோயிஸ்ட் பிடியில் இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

வேளாண் போராட்டத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம். போராட்டத்தின் நடுவே தங்களின் தலைவர்களை விடுவிக்கக் கோரிக்கை முன்வைக்கின்றனர். அதனால், மாவோயிஸ்ட் பிடியிலிருந்து விவசாயிகள் விலகினால், அவர்கள் நாட்டின் அமைதியைக் கருதி போராட்டத்தை நிறுத்துவார்கள்.

தேசத் துரோக குற்றத்திற்காகச் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க விவசாயிகள் போராட்டத்தில் கோரிக்கைவைக்கின்றனர். இதில் அறிவுஜீவுகளும் (நுண்புலம் நுழைவான்கள்), கவிஞர்களும் கலந்துகொள்வது வேடிக்கையானது. உங்களுக்கு ஏதேனும் கோரிக்கை இருந்தால் அதை அரசாங்கத்திடம் முன்வையுங்கள். அதை விடுத்து வேளாண் போராட்டத்தில் ஆதாயம் தேடாதீர்கள்” என்றார்.

மேலும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானலும் பேசத் தயார் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.