பிக் பாஸ்: வெளியேற்றப்பட்ட ஜித்தன் ரமேஷ்

பிக் பாஸ் 4ல் இருந்து இருந்து ஜித்தன் ரமேஷ் வெளியேயற்றப்பட்டார்.

ஜித்தன் ரமேஷ் கேப்டனாக எவ்வாறு செயல்பட்டார் என கமல் கேட்க தொடங்கினர். அவர் தன் பொறுப்புகளை vice கேப்டன் நிஷாவிடம் கொடுத்துவிட்டு ஜாலியாக இருந்தார் என பலரும் குற்றச்சாட்டை வைத்தனர். ’10 வாரம் ஆகிவிட்டது. பல வாய்ப்புகள் கொடுத்தாகிவிட்டது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கமல் அட்வைஸ் கொடுத்தார்.

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என கூறி கமல் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். நிஷா போய்டுவாளோ என அர்ச்சனா ரியோவிடம் சொல்லி அழுதார். இது எதிர்பார்க்காத ஒன்று என மற்ற போட்டியாளர்களும் திகைப்பில் தான் இருந்தனர்.

ஆனால் அவ்வாறு நடக்காமல் கமல் முன்பு கூறியது போலவே இன்றே ஒரு எலிமினேஷன் நடைபெற்றது. அதை சற்று வித்யாசமாக கமல் செய்தார். சோமை ஸ்டோர் ரூமிற்கும், ரமேஷை கன்பெக்ஷன் ரூமிற்கும் அனுப்பினார் கமல். இதில் ஒருவர் நேராக வெளியே வந்துவிடுவார் என்றும், மற்றொருவர் உள்ளே வருவர்வ் என்றும் கூறினார் கமல்.

அதன்படி ஜித்தன் ரமேஷ் வெளியே அனுப்பப்பட்டார். அர்ச்சனா மட்டும் கதறி அழுதார். அவர் வீட்டில் யாரிடமும் பேசாமல் அப்படியே வெளியில் வந்த நிலையில் அவரை அகம் டிவி வழியே பேச வைத்தார் கமல்.