மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய அடையாளமாக களம் காணும் ‘இன்’

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ‘இன்’ இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட் கைபேசி சந்தையில் மறுபிரவேசம் செய்யவுள்ளது.

‘இன்’ நிறுவனத்தின் தோற்றம், நிறம் உள்ளிட்டவை இந்தியாவின் நீல நிறங்களை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய பயனர்கள் முழுமையாக பயன்பெறும் நோக்கில் இதன் எதிர்கால திட்டங்கள் இருக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து இருக்கிறது.

ஒரு காலத்தில் தன்னிகரற்ற கைபேசிகளை விற்பனை செய்து, சந்தையில் பெரும்பங்கு வகித்துவந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி, சீன நிறுவனங்களின் கால்பதிப்பால் திசை தெரியாமல் சென்றது. தற்போது, அரசு உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டங்களை அறிவித்திருக்கும் நிலையில், அதன்மூலம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய தகவல் சாதன சந்தையில் மறுபிரவேசம் எடுக்கும் என்று நம்பப்படுகிறது.