உமா மகேஸ்வர மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானார். திருமுருகன் இயக்கி, நடித்த அந்த சீரியலில் அவருக்கு மனைவியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கால்நடை மருத்துவமரை திருமணம் செய்த பிறகு உமா மகேஸ்வரியை சீரியல்களில் பார்க்க முடியவில்லை. அவர் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் உமா மகேஸ்வரி இன்று காலமானார். அவருக்கு வயது 40. கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு உடல்நலக் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உமா மகேஸ்வரியின் மரணம் குறித்து அறிந்த சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். உமாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: கேரளாவில் வரும் 19-ம் தேதி வரை மழை தொடரும்



