கேரளாவில் பாஜக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு !

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில்,கேரள மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக முதலமைச்சர் வேட்பாளராக, கட்சியில் இணைந்து ஒரு வாரமே ஆன மெட்ரோமேன் எனப் போற்றப்படும் ஸ்ரீதரனை அறிவித்துள்ளது.

இது குறித்து பாஜக தலைவர் கே.சுரேந்திரன் கூறியது, நாட்டில் மெட்ரோ புரட்சிக்கு பின்னால் இருந்த ஸ்ரீரன், தற்போது மாநிலத்தை விரைவாக அபிவிருத்தி செய்ய உதவுவார்.

கேரளாவில் பத்து மடங்கு சக்தியுடன் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் அபிவிருத்திப் பணிகளைச் செயல்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என கூறினார்.

மேலும் அவர் பலரவட்டம் ஃப்ளைஓவர் திட்டத்தை ஐந்து மாதங்களில் எந்த ஊழலும் இன்றி நிறைவு செய்தார். அதனால்தான் ஸ்ரீதரனை தேசிய ஜனநாயக்க் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.