மாஸ்டர் திரைப்படம் வெளியானது உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்இளையதளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை கடந்த ஆண்டு திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது.

சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாலை 4 மணிக்கு படம் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள திரையரங்குகளில் இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, திருநெல்வேலி, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில், இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர். கோவையில் கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.