புதிய வேளாண் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் முடிவு வரவேற்கதக்கது – பி.ஆர். பாண்டியன் !

மத்திய அரசு பிறப்பித்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்க்கு விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.தற்போது புதிய வேளாண் சட்டத்திற்கு இடை கால தடை போடப்பட்டுதுள்ளது.

மேலும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்தை நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமலும், மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளுடைய கருத்துகளைக் கேட்காமலும் சட்டத்தை நிறைவேற்றியது.

மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களுக்குத் தடை விதித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.ஆய்வுக்குழு மூலம் மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் கருத்துகளை அறிந்தும் சட்டத்தில் இருக்கிற பாதிப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கும் என அறிவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும்.

மத்திய அரசு இனியும் காலம் கடத்தாமல் உடனடியாக வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.