மாஸ்டர் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இப்படத்தின் தணிக்கை முடிந்துவிட்டதாகவும், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் யு சான்றிதழ் பெற படக்குழு முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.