கரோனா தடுப்பூசி: மத்திய அரசு யாரையும் கட்டாயப்படுத்தாது

கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு யாரையும் கட்டாயப்படுத்தாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி எடுத்துகொள்வதற்கு பொதுமக்கள் இடையே ஏற்படும் தயக்கத்தை, விழிப்புணர்வு மூலம் களைக்கப்படும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி நாட்டு மக்களின் நலனுக்காகவும், நன்மைக்காகவும் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இறுதியாக, தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் விரும்பவில்லை என்றால், அவர்களை அரசு கட்டாயப்படுத்தாது எனக் கூறினார்.