ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் சித்தி விநாயகர் கோவிலின் முன்பு இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தப்போது, தலையில் ரத்தக்காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பது உறுதியானது. அப்போது 30 வயது மதிப்புள்ள இளைஞரின் தலையில் செங்கலை போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.
மேலும் போலீசாரின் விசாரணையில், தற்போது கோவில் கட்டுமானப்பணி நடைபெறுவதால் கோயில் முன்வாசல் கதவு முன்பு மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மணல் குவியலுக்கும் கோவில் வாசல்படிக்கும் இடையே இருந்த மறைவான பகுதியில் நடந்த கொலை சம்பவம் வெளியே தெரியவில்லை என போலீசார்.
மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா பழுதடைந்ததால் கொலை சம்பவம் பதிவாகவில்லை. இதனால் கொலையாளியை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



