புதுவையில் முதமைச்சர் நாராயணசாமி மற்றும் முன்னாள் ஆளுநர் கிரண் பேடி இருவருக்கும் கருத்துக்கள் ஒத்துப்போகாத நிலையில் கிராம் பேடி துணை நிலை ஆளுநர் பதிவிலிருந்து நீக்கப்பட்டார்.தற்போது புதிய துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தராஜன் பொறுப்பேற்றுள்ளார்.
மேலும் புதுவையில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் தற்போது தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ வெங்கடேசனும் செய்து அரசியல் அரங்கை அதிர வைத்திருக்கிறார்.
சபாநாயகரிடம் தனது ராஜினாமா கொடுத்த கையோடு செய்தியாளர்களை சந்தித்த அவர் எனது தொகுதியில் அடிப்படை வசதிகூட இந்த அரசால் செய்து கொடுக்க முடியவில்லை என்ற வேதனையுடன் ராஜினாமா செய்வதாக கூறினார்.



