மேற்குவங்க மாநில பாஜக இளைஞரணி செயலாளர் பமீலா கோஸ்வாமி கொல்கத்தாவில் 100 கிராம் போதைப் பொருள் வைத்திருந்ததாக தெரிகிறது.இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி அதிரடி சோதனை நடத்தியதில் பமீலாவிடம் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் பாஜக இளைஞரணி செயலாளர் பமீலா கோஸ்வாமி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக தீவிரமாக பணியாற்றி வரும் சூழலில் அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பாஜக நிர்வாகி போதைப் பொருள் கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.



