கரோனா தொற்றுக்கு பிறகு பறவை காய்ச்சல் பரவி வந்தது.இது உலகநாடுகள் மட்டும் இல்லாமல் இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது.தற்போது முதன் முறையாக ரஷ்யாவில் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் பறவைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் உலகில் முதன்முறையாக ரஷ்யாவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் (WHO), நுகர்வோர் சுகாதார கண்காணிப்புக் குழுவின் தலைவர் அன்னா போபோவா தெரிவித்தார்.
மேலும் இறந்த கோழிகளில் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவலாம். ஆனால், கோழியை முறையாக சமைத்து சாப்பிட்டால் தொற்று பரவும் வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபீரியாவின் வெக்டர் நிறுவனம் H5N8க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் பணிகளை தொடங்கிவிட்டதாக RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



