த்ரிஷயம்- 2 பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுமா !

ஓ.டி.டி தலமான அமேசான் பிரைமில் த்ரிஷயம்- 2 மோகன்லால் நடிப்பில் வெளியாகில் உள்ளது.ஜித்து ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக த்ரிஷய்ம் – 2 இருக்கிறது.

முதல் பாகத்தை போலவே, இரண்டாவது பாகத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர். முதல் பாகத்தை போலவே, த்ரிஷ்யம் 2 படமும் தமிழில் ரீமேக் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தமிழ் மொழியில் ரீமேக் செய்ய உரிமையை பெறுவதற்காக கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்த படத்தையும் ஜித்து ஜோசப் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முதல் பாகத்தை போல இந்த படமும் அணைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்படலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.