கேரளாவில் அறிமுகமாகும் டிஜிட்டல் பல்கலைக்கழகம் !

கரோனா தொற்று வந்த பிறகு அனைத்தும் ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது.தற்போது பள்ளி மாணவர் மாணவிகளுக்கு கூட ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்தி கேரள டிஜிட்டல் அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

GUI (Graphical User Interface) concept.

நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகமான இதை ஆளுநர் ஆரீப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் நேற்று, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தனர்.

இந்நிலையில் விழாவில் பேசிய கேரள ஆளுநர் இவ்வாறு கூறினார்,புதிய தொழில்நுட்பங்களை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் கற்பிப்பதில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாகவும், செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, இணையவழிக் குற்றத் தடுப்பு தொழில்நுட்பங்களை இளைஞா்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.