முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி பளிச் சருமம் பெற இதோ சில டிப்ஸ் !

முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் பார்க்க நன்றாக இருக்காது.இது எதனால் வருகிறது என்றால் பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறும்.மேலும் நம் சருமம் இந்த சூழலில் மாசு படுவதாலும் கரும்புள்ளிகள் வரும்.இதை சரி செய்ய இதோ சில விழிமுறைகள்.

வெளியில் சென்று வீடு திரும்பிய பிறகு கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்.வாரம் இரண்டு முறை . முல்தானி மெட்டியுடன் வெள்ளரிச்சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் பேஷ்பேக் போல போடவேண்டும். நன்றாக காயவிட்டு பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

பாசிப்பயறு மாவு ஒரு ஸ்பூன் அதனுடன் ஒரு ஸ்பூன் வேப்பிலை ஜூஸ் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு கலந்து முகத்தில் தாவி 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.இதனால் கரும்புள்ளிகளின் மறைய தொடங்கும்.

சிறிதளவு தேனுடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

புதினாவை அரைத்து அந்த ஜீஸ் ஐ ஒரு பஞ்சில் நனைத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும்.இதை செய்தல் நாளடைவில் நல்ல மாற்றத்தை உணரலாம்.