டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர்..!

அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் வாட்டிவதைத்து வருகிறது. வரலாறு காணாத அளவுக்கு பனிப்புயல் வீசியதால் வீடுகள், சாலைகள் என காணும் இடமெல்லாம் உறை பனிக்குள் மூழ்கியுள்ளன.

கடும் குளிரால் மின்சாரத் தேவை அதிகரித்திருக்கும் நிலையில், பனிப்பொழிவு காரணமாக மின்சார உற்பத்தி முடங்கியுள்ளது. சுமார் 30 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், மின்சார விநியோகப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

டெக்சாஸ் மாகாணத்தில் பனிப்பொழிவு வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த பாதிப்பை மிகப்பெரிய பேரழிவு என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.