அமைச்சர் ஜாகிர் ஹுசைன் மீது நடந்த தாக்குதல் பற்றி மம்தா பானர்ஜி கருத்து !

மேற்கு வங்கமாநில தொழிலாளர் துறை அமைச்சர் ஜாகிர் ஹூசைன் முர்ஷிதாபாத்திலுள்ள நிமிட்டா ரயில்நிலையத்துக்கு சென்றிருந்தபோது அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தாக்குதலில் அமைச்சர் மற்றும் பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு இன்று காலையில் முதல்வர் மம்தா பானர்ஜி சென்றார். அங்கு மருத்துவர்களிடம் உசேனின் உடல்நலம் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி விசாரித்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இந்த தாக்குதல் திட்டமிட்ட சதி. இது அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய தாக்குதல். ரயில்நிலையத்தில் இவ்வளவு பெரிய தாக்குதல் நடைபெற்றுள்ளது. ரயில்வே துறை உரிய பாதுகாப்பு செய்யவில்லை. மேலும் இதுதொடர்பாக மாநில சி.ஐ.டி விசாரணை நடத்தும் என்று தெரிவித்தார்.