நூலகங்களை திறக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் !

தமிழகத்தில் நகர் புறங்களில் உள்ள அனைத்து நூலகங்களை நான்கு வாரத்திற்குள் திறக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சவுந்தர்யா என்பவர் தமிழகத்தில் கரோனா காலத்தில் மூடப்பட்ட நூலகங்களைத் திறக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

கரோனா தொற்று காரணமாக அணைத்து நிறுவனங்களும் இயங்குவது குறைந்தது.மேலும் மக்கள் கூடும் இடமான நூலகங்களும் பல மாதங்களாக மூடப்பட்டது .ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கரோனா தோற்றால் அதிக பாதிப்புக்கு ஆளாகுவது நகர்ப்புறங்களே. அங்கிருக்கும் நூலகங்களே திறக்கப்பட்டிருக்கும் நிலையில், கிராமப்புற நூலகங்கள் விரைவாகத் திறக்கப்பட வேண்டும்” எனக் கருத்து தெரிவித்தனர். மேலும் நூலகங்கள் திறப்பது குறித்து 8 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.