மாளவிகா மோகனன் பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து..!

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.