இன்றைய பெட்ரோல் விலை

சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.102.49ஆக விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.94.39 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது, அதிலும் கொரோனா நெருக்கடியிலும் தொடர் விலையேற்றம் மிகுந்த துயரத்தில் ஆழ்த்துவதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் 18 நாள்களாக விலையேற்றமில்லாமல் இருப்பது வாகன ஓட்டிகளை நிம்மதியடையச் செய்துள்ளது.