தரிசியுங்கள் மகாலிங்க ஸ்வாமியை !

திருவிடைமருதூர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக திகழ்கிறது.இந்த தலத்தில் பிரகாரங்களில் உள்ள மாடங்கள் பிரமிக்க வைக்கின்றன.திருவாவடுதுறை ஆதினம் இந்த ஆலயத்தை மிகச்சிறப்பாக பராமரித்து வருகிறது.இந்த ஆலயத்தின் நான்கு புறங்களிலும், நான்கு கோபுரங்களுடன் நுழைவாயில் உள்ளது.

திருவிடைமருதூர் ஆலயம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார திருத்தலமாகும்.இது வெளிப் பிரகாரத்தை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும்.மனநோய் மற்றும் ஒரு தலைமுறைக்கான பாவம் போக்க உள்ள கோவில்.இந்த கோவிலை சுற்றி வந்த சிற்பங்களை காண கண்கள் கோடி வேண்டும்.திருமணம் ஆகாதவர்,புத்திர பாக்கியம் வேண்டும் என்பவர் இங்கு வந்து மஹாலிங்கரை தரிசியுங்கள் பாவம் போகும்.

அமைவிடம்

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது.