ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் – மதுரை !

2018ல் ,18 மாதங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் என மதுரை மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.இதற்காக 159. 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெரியார் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டது . இதுவரை பெரியார் பேருந்து நிலையம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தற்காலிக பேருந்து நிலைய பகுதியில் போதுமான கழிவறை, குடிநீர், மேற்கூரை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரவும், நீதிமன்றத்தில் அளித்த உறுதியின் அடிப்படையில் விரைவாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தைக் கட்டி முடிக்கவும் எனக் கோரியிருந்தனர் .

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி தரப்பில் இதுவரை 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. விரைவில் பணிகள் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி தரப்பில், வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.