கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால் 9 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு அனுமதியளித்தது.மேலும் பள்ளிகளில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் தமிழகத்தில் மாணவர்கள் சுழட்சி முறையில் மாணவர்கள் வர வேண்டும்.வகுப்புகளில் சமூக இடைவேளையை மற்றும் கிருமி நாசினி போன்றவற்றை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட 2 வாரத்தில் சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வஹாபுதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில்,பல பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் நேரடி வகுப்புக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,மாணவர்களை வகுப்புக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க :மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் எப்போது திறக்கும்



