பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்.மேலும் இவர் தமிழ் படங்களில் அருந்ததி,ஒஸ்தி,தேவி போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான 6-க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.


இந்த சோதனை முடிவு இன்னும் தெரியவில்லை.மேலும் கொரோனா தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.அப்போது மும்பையில் சிக்கிய பிற மாநில தொழிலாளிகளை அவர்கள் ஊருக்கு செல்ல வாகனம் மற்றும் உணவு போன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்துகொடுத்தார்.
இந்த செயல் மூலம் நடிகர் சோனு சூட் பிரபலமானார்.மேலும் பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி மூலம் களமிறக்கப்படலாம் என்று செய்திகள் வந்தன.இந்நிலையில்,இன்று இவரது இல்லம் மற்றும் இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை



