மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் எப்போது திறக்கும் !

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.

தற்போது இந்த ஊரடங்கில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் 9 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்று அரசு அறிவித்தது.

அதன் படி,செப் 1 முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிக்கல்வி துறையின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார்.அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது பற்றி 30ம் தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க :அட இப்படி ஒரு அறிவிப்பா..தடுப்பூசி போட்டுக்கொண்டால் பெட்ரோல் இலவசமா