மாநாடு படத்தின் டீசர் வெளியீடு !

சிம்புவின் பிறந்தநாள் தினமான இன்று மாநாடு படத்தின் டீசர் வெளியானது.வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு ,பிரேம் ஜி அமரன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.நடித்து சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது.

சிலம்பரசனுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரே நேரத்தில் 5 மொழிகளில் டீசர் வெளியிடப்பட்டது. அதை ஒவ்வொரு மொழியிலும் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ளார். மாநாடு தமிழ்பட டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டார்.