தமிழக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா !

urban-local-bodies-election-dmk-bags-a-mega-victory
திமுக கூட்டணி மகத்தான வெற்றி

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது.இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 23ம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.. தற்போது அமலில் உள்ளதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ந்தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் ஊரடங்கு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவிருந்தார்.

மேலும் இந்த ஆலோசனை கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது,நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள், திரையரங்குகளை திறப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.