தமிழகத்தில் மேலும் ஒரு வாரகாலம் ஊரடங்கு நீட்டிப்பு !

கோவாவில் இரவு நேர ஊரடங்கு

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றை தடுக்க தமிழக அரசு மே 10 முதல் ஊரடங்கு போடப்பட்டது.

தற்போது மீண்டும் ஒரு வாரம் ஜூன் 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் 27 மாவட்டங்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் கட்டுப்பாடுகள் தொடரும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் , இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் வரும் திங்கள் கிழமை முதல் செயல்படலாம்.