நடிகை யாமி கவுதம் திருமண கொண்டாட்டம் !

நடிகை யாமி கவுதம் இந்தி,தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது இவர் திடீரென்று திருமணம் செய்துகொண்டார்.

இந்தியில் யூரி – சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதித்யா தர்ரை தான் இவர் திருமணம் செய்துள்ளார். யூரி படத்தில் யாமியும் நடித்திருந்தார்.அப்போது இருவருக்கும் காதல் உருவானது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,குடும்பத்தினரின் ஆசீர்வாதத்தோடு, நெருங்கிய நபர்கள் மட்டும் பங்குகொண்ட விழாவில் எங்கள் திருமணம் நடந்து முடிந்தது. அன்பும், நட்பும் சேர இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கும் இந்த வேளையில் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும், நல்வாழ்த்துகளையும் கோருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.