இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

கரோனா பாதிப்பு வந்த பிறகு தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,920 -க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு ௩௦ ரூபாய் அதிகரித்து , ரூ.4,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 75 ,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து ரூ.76,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.