தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் ஊரடங்கு !

urban-local-bodies-election-dmk-bags-a-mega-victory
திமுக கூட்டணி மகத்தான வெற்றி

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது.இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 23ம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ளதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ந்தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் ஊரடங்கு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் ஊரடங்கை மேலும், இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் புதிய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்படம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும்.மேலும் அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும்.

கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.