சைனீஸ் மற்றும் கொரிய மொழிகளில் ஹன்சிகாவின் படம் !

நடிகை ஹன்சிகா மோத்வானியின் ‘105 மினிட்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இந்த படம் ஹன்சிகா நடித்த கதாபாத்திரத்தை சுற்றி நடக்கும் ஒரு த்ரில்லர் படம் .மேலும் இந்த படத்தில் உரையாடல்கள் குறைவாக இருப்பதால், அதை சீன மற்றும் கொரிய மொழிகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து நடிகை ஹன்சிகா கூறுவது,இந்த படம் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும். தயாரிப்பாளர்கள் சர்வதேச வெளியீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.இது இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

சீன மற்றும் கொரிய மொழிகளில் வெளியாகவுள்ளது.இந்த திரைப்படம் வெறும் 5-6 காட்சிகளைக் கொண்டிருக்கும், ஒவ்வொன்றும் சுமார் 20 நிமிடங்கள் ஓடும் நீளம் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.