12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான முதல் கோவிட் தடுப்பூசி !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை பெரிதும் பாதித்தது.கடந்த ஆண்டை விட இந்த வருடம் பாதிப்பு அதிகம்.தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தனி தனியே ஊரடங்கை அறிவித்துள்ளது.

தற்போது கோவிஷீல்டு, கோவேக்சி, ஸ்புட்னிக் -வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.இதில், கோவேக்சின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியாகும்.

இந்தநிலையில், இந்தியாவின் சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்த சைகோவ்-டி கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி கிடைத்துள்ளது .மேலும் இது இளைஞர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கு அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது உலகின் முதல் DNA தடுப்பூசி ஆகும். மேலும் ஆண்டுதோறும் 100 மில்லியன் முதல் 120 மில்லியன் டோஸ் ZyCoV-D ஐ தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தடுப்பூசியை சேமித்து வைக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.இது கொரோனாவுக்கு எதிராக 66.6 சதவிகித செயல்திறன் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது.