இன்று ரகுவரனின் 61-வது பிறந்த தினம்

மறைந்த நடிகர் ரகுவரனின் பிறந்த தினம் இன்று. கதையின் நாயகன், கொடூர வில்லன், சிறந்த தந்தை, நம்பிக்கைக்குரிய நண்பன் என ஒரே நேரத்தில் எல்லாவித கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க தகுதியான ஒரு நடிகர் என்றால் அது தமிழ் சினிமாவின் இதுநாள்வரை ரகுவரன் மட்டுமே.

அமிதாப் பச்சனை விட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் என பாராட்டப்பட்ட ரகுவரன் தென்னகத்தின் அமிதாபச்சன் என கொண்டாடப்பட்டார். 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த ரகுவரன் 2008-ஆம் ஆண்டு 49 வயதில் மண்ணுலகை விட்டு பிரிந்தார். காலத்தால் அழிக்க முடியாத பல கலை படைப்புகளை அரங்கேற்றி சென்ற ரகுவரன் இனி நடிப்பு பயிலும் இளைஞர்களுக்கு பாடமாக என்றும் நிலைத்திருப்பார்.