பிரதமராக கே.பி.சர்மா ஒளி பதவியேற்றார் – நேபாளம் !

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட்சி பூசலால் பிரதமர் கே.பி.சர்மா ஒளி தலைமையிலான அரக்கு நெருக்கடி ஏற்பட்டது.நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி.சர்மா ஒளி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார்.

ஆனால் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகளால் முடியவில்லை. எனவே நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒளியையே அதிபர் மீண்டும் நியமித்தார்.

அதன்படி அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். மேலும் 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் கே.பி.சர்மா ஒளி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளார்.