ஆன்லைன் வகுப்புகாக கால்வாய் சுத்தம் – பரிசளித்த துணை ஆணையர்

சென்னையில் ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்க வேண்டி கால்வாய் தூர்வாரும் வேலைக்கு சென்ற சிறுவனின் புகைப்படம் வைரல் ஆன நிலையில் கொடுங்கையூர் போலீசார் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டேப்பை வாங்கி கொடுத்து அசத்தியுள்ளனர்.

கொடூங்கையூரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் சாமுவேல் என்ற சிறுவனின் தந்தை ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆன்லைன் கிளாசில் பங்கேற்பதற்காக செல்போன் வாங்க சாமுவேல் கழிவுநீர் தூர்வாரும் வேலைக்கு சென்றுள்ளார். அவர் கால்வாய் சுத்தம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா, ரூ.25ஆயிரம் மதிப்புள்ள டேப்பை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு ஒருமாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.