ஏர்டெல்லின் புதிய போஸ்ட்பெய்ட் திட்டம்..!

ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ.939 இல் தொடங்குகிறது. 500 ஜிபி வரையிலான தரவு, ஓடிடி சந்தா மற்றும் கூடுதல் இணைப்பு போன்ற வசதிகள் இதில் அடங்கும்.

உங்கள் குடும்பம் முழுவதிற்கும் ஒரு மலிவான போஸ்ட்பெய்ட் திட்டத்தை பெற, ஏர்டெல்லின் Me & My Family ப்ளான் உங்களுக்கு மிகவும் அருமையான திட்டமாக இருக்கும் எனலாம்.

ஏர்டெல்லின் பேமலி ப்ளான்களின் ரூ .749, ரூ .999 மற்றும் ரூ .1,599 ஆகிய கட்டணங்களில் பெறலாம். உண்மையில், நீங்கள் ஒரு எளிய போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கூடுதல் இணைப்பை பெற கட்டணம் ரூ.299 . இதேபோல், Data Add on பெற மாதத்திற்கு 99 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், Me & My Family திட்டத்தில் ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் ரூ .749 திட்டத்தில், பாரதி ஏர்டெல்லின் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் இரண்டு இலவச கூடுதல் இணைப்புகள் கிடைக்கின்றன.

இந்தத் திட்டதில் ஒரு மாதத்திற்கு 125 ஜிபி டேட்டா கிடைக்கும், அதனுடன் டேட்டா ரோல்ஓவர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து நெட்வொர்க்குளுக்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம்.