இன்றைய தங்கம் விலை

தங்கம் விலை இன்றும் மீ்ண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு பவுன் மீண்டும் 34 ஆயிரத்தை கடந்ததுள்ளது.

கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ரூ.4258-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.34064-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37192-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி 90 காசுகள் உயர்ந்து ரூ.72.50க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.72,500 ஆக உள்ளது.