நுழைவுத் தேர்வு கட்டாயம் – மத்திய அரசு !

Students using pencil reading information on white paper in high school, Asian exams room, Tests or examination is assessment intended to measure knowledge, skill, aptitude, Education study Concept

மருத்துவ படிப்பு சேருவதற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ம் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.இந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு மற்றும் ஆதரவு இருந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில்,நாடு முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், பிஎஸ்சி நர்சிங் மற்றும் உயிர் வேதியியல், உயிர் விலங்கியல், நுண்ணறிவியல் போன்ற கலை அறிவியல் கல்லூரியில் உள்ள உயிர் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என அனில் சகஸ்புரத்தே தெரிவித்துள்ளார்.