வருகிறது அடுத்த ஆபத்து தோல் பூஞ்சை நோய் !

இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு
தஞ்சையில் கொரோனாவுக்கு இளம்பெண் உயிரிழப்பு

இந்தியாவில் காரோண தொற்று இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்தன.மற்றும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கரோனா பாதித்த நபர்களுக்கு கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்கள் தாக்கப்பட்டு வந்தன.இதை தொடர்ந்து தற்போது இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடகத்தில் கரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயது நபர். இவருக்கு நாட்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதன்மூலம் அவர் கரோனாவில் இருந்து குணமடைந்தார்.இந்த நிலையில் அவருக்கு காது பகுதியில் பூஞ்சை உருவாகி இருந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக டாக்டர்கள் மைசூருவில் உள்ள அரசு காது, மூக்கு பிரிவு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவருக்கு தோல் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

கரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தோல் பூஞ்சை நோய் ஒருவருக்கு தாக்கப்பட்டுள்ளது.