கர்நாடகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது..!

கொரோனா இரண்டாம் அலையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்த வரிசையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இரவு ஊரடங்கு விதிக்கப்படுவதாக கர்நாடக அரசும் அறிவித்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எடியூரப்பா மருத்துவமனையில் இருந்துகொண்டே வீடியோ வாயிலாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில், கர்நாடகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மே 4ஆம் தேதி வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

தெலங்கானா மாநில அரசு ஏற்கெனவே இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துவிட்டது. இதுபோக, உத்தரப் பிரதேச அரசும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

டெல்லியிலும், ஜார்கண்டிலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு தழுவிய ஊரடங்கு விதிக்க தற்போது வாய்ப்பில்லை என பிரதமர் மோடி இன்று உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.