தமிழகத்திலிருந்து ஆக்சிஜன் கடத்தலா ?

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக தாக்கிவருகிறது.இந்நிலையில் மக்கள் முகக்கவசம் அணியவும் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்துகிறது.மக்களும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.

குஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசுக்கு தெரியாமலேயே இந்த 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை எடுத்துச் சென்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எங்களுக்கு தெரியாமல் மத்திய அரசு 45,000 கிலோ ஆக்சிஜனை, தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலத்திற்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.