கர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு

கர்நாடகா முதல்வர் பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று தேர்வு செய்யப்பட்டார் .

இந் நிலையில், இன்று பா.ஜ. சட்டசபை பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ளது.. இதில் கர்நாடகா பா.ஜ. மேலிட பார்வையாளர்களான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.