கிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..!

தெலங்கானா மாநிலங்களவை எம்.பி. சந்தோஷ் குமார் விடுத்த கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் அமிதாப்பச்சன்.

சென்ற வருட ஊரடங்கின் போது தென்னிந்தியாவில் இந்த கிரீன் இந்தியா சவால் பரவியது. ஒருவர் மரக்கன்று நட்டு இன்னொருவரை மரக்கன்று நடும்படி கேட்க வேண்டும். இதுதான் கிரீன் இந்தியா சேலஞ்ச்.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளில் ஒரு மரக்கன்று நட்டு நடிகர் விஜய்யை கிரீன் இந்தியா சவாலுக்கு அழைத்தார். சவாலை ஏற்று விஜய்யும் ஒரு மரக்கன்று நட்டார். இதேபோல் பல நட்சத்திரங்கள் மரக்கன்றுகள் நட்டனர்.

தெலங்கானா மாநிலங்களவை எம்பி சந்தோஷ் குமார் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கிரீன் இந்தியா சவாலை விடுத்திருந்தார். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தில் அமிதாப்பச்சனும் நடிக்கிறார்.