பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இந்நிலையில்,கொரோனா தொற்றின் நாள் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.

இந்நிலையில்,இந்த கொரோனா காலத்தில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுவருகின்றன.இந்த நிலையில் பி.இ., பி.டெக்., போன்ற பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் பதிவு நடைபெற்று வருகிறது.ஆகஸ்ட் 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு செமஸ்டரில் கடைசி வேலை நாள் நவம்பர் 30 என்றும், டிசம்பர் 2ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.