கன்னட திரைப்பட இயக்குனர் விஜய் ரெட்டி காலமானார்

ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தடபள்ளிகுடம் பகுதியில் பிறந்தவர் விஜய் ரெட்டி. கடந்த 1953ஆம் ஆண்டு திரை துறையில் நுழைந்த அவர் இயக்குனர் விட்டலாச்சார்யாவின் கன்னட படமொன்றில் உதவி இயக்குனராக பணிபுரிய தொடங்கினார்.

அதன்பின்னர் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய படங்களில் ரங்கமகால் ரகசியா, காந்தட குடி, மயூரா மற்றும் சனாதி அப்பண்ணா ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பு பெற்ற படங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்த நிலையில் உடல்நல குறைவால் அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here