காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சிங்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களது வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

இதன்பின் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வீரர்கள் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.